Thursday, 18 August 2011

ஆதிதிராவிடன்: ‘கற்பனை’யாக்கப்பட்ட இதழ் (உண்மெய்யும் திரிபும்) - இடுகை 2

ஸ்டாலின் ராஜாங்கம்



ஆதிதிராவிடர் என்னும் அடையாளம் அரசியல் தளத்தில் முக்கியத்துவமடைந்த சமகாலத்தில்தான் ஆதிதிராவிடன் என்னும் மாத இதழ் இலங்கையிலிருந்து வெளியானது. 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தென் இந்திய ஐக்கியச் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எஸ்.பி. கோபால்சாமி என்பவர் இதன் ஆசிரியராவார். இச்சங்கம் 1922இல் இந்தியன் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் ஊழியன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக இவ்விதழ் வெளியானதாகத் தெரிகிறது. இரண்டாண்டு முடிவில் முதலாண்டு இதழ்கள் ஒரு தொகுதியாகவும் இரண்டாமாண்டு இதழ்கள் மற்றொரு தொகுதியாகவும் தொகுத்து வெளியிடப்பட்டன.

As the identity called Adi Dravidar became important in the political sphere, at the same time, a monthly magazine called Adi Dravidan was published from Sri Lanka. On behalf of the South Indian Aikiya Sangam – which was begun in Sri Lanka in March, 1912 – this magazine was begun in 1919. S.P. Gopalsami was the editor. The Sangam changed its name in 1922 to Indian Oppressed Peoples’ Servant. It seems that the journal was published for over two years. At the end of two years, the journals of the first year were published as one volume and those of the second as another.

ஆதிதிராவிடர்களின் கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம், லௌகீக விசயம், ராஜ விசுவாசம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டாலும், ஆதிதிராவிடர்களுக்கான கல்வியையே முதன்மை நோக்கமாய்க்கொண்டு இயங்கியது. கேசவ பிள்ளை, சிதம்பரம் நந்தனார் பாடசாலை சுவாமி சகஜானந்தர் ஆகியோர் இலங்கை சென்ற காலத்திலேயே இவ்விதழ் உருப்பெற்றது. சமய அடிப்படையில் சைவ சமய உணர்வைப் போற்றிய இதழ் இது.

Though the stated aim was to foster the education, discipline, culture, spiritual guidance and loyalty to the King among Dalits, it functioned with education as its primary aim. This magazine had taken shape in the time when people like Kesava Pillai, Chidambaram Nandanar, Paadasaalai Swami Sagajaanandar had gone to Sri Lanka. With a religious base, this magazine fostered the Shaivite religious sentiment.

தெய்வமிகழேல், சக்கர நெரிநில், ஊக்கமது கைவிடேல் என்னும் வாசகங்களை முகப்பிலே தாங்கி 16 பக்கங்களில் வெளியானது. இதழின் பக்கங்களைக் கூட்டவும் வார இதழாக மாற்றவும் தொடர்ந்து விருப்பத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் விருப்பம் நிறைவேறாமலேயே நின்றுபோனது. 1000 சந்தாவினை நெருங்கியிருந்த இந்த இதழ் தமிழகம், கோலார் தங்கவயல், பர்மா ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நன்கொடை, சந்தா ஆகியவை கிடைத்துவந்தபோதிலும் இதழ் நிலைப்பதற்கு போதுமானவையாக அவை இல்லை. ஆயிரம் பிரதிகளை நெருங்கியிருந்த இவ்விதழ் ஆதிதிராவிடர்களின் அறிவுசார்ந்த வேட்கையினை அடையாளம் காட்டக்கூடியதாக இன்றைக்கு மாறி நிற்கிறது. ஆதிதிராவிடர் அல்லாதாரும் சந்தாதாரர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதழ் பற்றிய விமர்சனம் சுதேசமித்திரன் இதழிலும் வெளியானது.

With aphorisms such as ‘Do not despise god’, ‘Stand by ethics’, ‘Do not abandon enthusiasm’ on the cover, it was published with 16 pages. Though the wish that pages could be increased and that the journal be made a monthly was expressed frequently, this never happened. This magazine, which had a subscriber base of close to 1000, was sent to places including Tamil Nadu, Kolar Gold Fields and Burma. Though it received continuous donations and subscriptions, these were not sufficient to keep the magazine going. This magazine, that reached a print run of close to 1000, today has become proof of the Adi Dravidar’s intellectual thirst. It is notable that non-Adi Dravidar also participated in this magazine as contributors and subscribers. A review of the magazine also appeared in the Sudesamitran.

பின்னாளில் திராவிடன் இதழின் ஆசிரியராக விளங்கிய கனக சங்கர கண்ணப்பன் சூத்திரர் யார்? ஆதிதிராவிடர்களின் தொழில் போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். ஆதிதிராவிடர்கள் விவசாயம், நெசவு, போர், இசைத் தொழில், வள்ளுவர் எனப் பல்வேறு தொழில் புரிந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்றெழுதிய அவர் இக்கருத்தினையே எஸ். சோமசுந்தரம்பிள்ளை போன்ற சென்னை வாழ் ஆதிதிராவிடர்களும் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆதிதிராவிடர்கள் பல்வேறு தொழிலிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தனர் என்னும் வரலாற்றுரீதியான நம்பிக்கையினைப் பலரும் கொண்டிருந்தனர் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. அதேபோல இவ்விதழில் வெளியான சுவாமி சகஜானந்தரின் உரைகள் மூலம் அவருக்கிருந்த விரிவான தமிழறிவு புலப்படுகிறது. சகஜானந்தரைப் போற்றிய இவ்விதழ் நம் தலைவர் எம்.சி. ராஜா என்று எம்.சி. ராஜாவையும் போற்றத் தவறவில்லை. இத் தலைப்பிலேயே வெளியான கட்டுரையொன்றில் “இம்மஹான் நம் ஆதிதிராவிட குலசிரேஷ்டர், சென்னை, ஆதிதிராவிட மஹாஜன சபைக்கு செக்ரடேரியும் தற்காலம் வந்துலாவும் சென்னை ஆதிதிராவிடன் பத்திரிக்கைக்கு ஆசிரியருமாவார். . . ஆதிதிராவிட மக்களில் சட்ட நிருபண சபைக்கு மெம்பராகத் தெரிந்தெடுப்பது இதுவே முதல் தடவை” (1919 ஆகஸ்ட் 15) என்று புகழ்கிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து ஆதிதிராவிடன் என்னும் இதழ் எம்.சி. ராஜாவை ஆசிரியராகக்கொண்டு வெளியானது எனும் குறிப்பும் இக்கட்டுரை மூலம் கிடைக்கிறது.

Who was Kanaga Sankara Kannappan Soothirar, the editor of the Dravidan magazine in later days? He continually wrote essays such as the work of Adi Dravidar. Mentioning that the Adi Dravidar were involved in agriculture, weaving, war, music, fortune telling and other such work, he mentions that Adi Dravidar Chennai residents like Somasundaram Pillai said the same. Through this, we learn that many people believed the Adi Dravidar to have skill in many trades. Similarly, the speeches of Swami Sagajaanandar show the breadth of his knowledge of Tamil. The same magazine that praised Sagajaanandar did not fail to praise M.C. Raja as ‘our leader M.C. Raja’. In an essay that was published under this headline, he is praised as, “This great man of our Adi Dravidar clan is Chennai secretary of the Adi Dravida Mahajana Sabha and is editor of the Chennai Adi Dravidan magazine as well…this is the first time that a member of the Adi Dravida people has been selected to the Legislative Council” (1919, August 15). Through this essay, we learn that a magazine called Adi Dravidan was being published from Chennai with M.C. Raja as the editor.

பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இவ்விதழில் மறைமலையடிகள் எழுதிய நூல்கள் குறித்த விளம்பரங்கள் விரிவான அறிமுகக் குறிப்புகளுடன் பன்முறை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கல்லல் பகுதியில் ஆதிதிராவிடர்கள் படும் சாதிக் கொடுமைகள், இலங்கையில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள், தென்னிந்திய ஐக்கியச் சங்கத்தின் பணிகள் போன்ற பல செய்திகளும் இடம் பெற்றன.

In this magazine that continuously wrote about the advancement of women, Maraimalai Adigal’s books were advertised several times with extensive introductions. There was also other news about the caste atrocities that were inflicted upon Adi Dravidar in the Kallal region of the Ramanathapuram district, the caste problems in Sri Lanka and the work of the South Indian Aikkiya Sangam.

ஆதிதிராவிடர்களின் கல்வி சார்ந்து இவ்விதழில் பதிவுகள் தனியாக எழுதுமளவுக்கு விரிவாக அமைந்துள்ளன. ஆதிதிராவிடர்கள் கல்வியின் மூலமே சாதிய இழிவை விலக்கிக்கொள்ள முடியும் என்று உறுதிபட எழுதியது. கிறித்தவப் பாதிரிமார்கள்கூடக் கல்வியின் பெயரால் இம்மக்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்னும் கோபத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் இம் மக்களின் தனித்துவமான நடவடிக்கைகளினாலே இவை சாத்தியமடைய முடியும் என்று சொல்லவும் செய்தது. அதாவது, “இலங்கை தென்னிந்திய ஐக்கியச் சங்கம், தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் ஐக்கியச் சங்கம் மற்றும் குலாபிமானிகள் முன்னின்று நடத்தினால் மட்டுமே” கல்வி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கைகூடுமென்று எழுதியது.

There are separate essays that find place in this journal on the theme of the education of the Adi Dravidar. It was written firmly that the Adi Dravidar would be able to remove the slights of caste through education alone. The magazine expressed anger against Christian pastors who were ‘using’ these people in the name of education, while acknowledging that the unique practices of the people made this possible. The magazine carried exhortations that only the uniting of the Sri Lanka South India Aikkiya Sangam and the South India Oppressed People’s Aikkiya Sangam and other leaders from the community could lead to reforms in areas including education.

கோயம்புத்தூர் ஆர். வீரையன் போன்றோர் ஆதிதிராவிடர் கல்விக் குறித்துத் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று:

People like Coimbatore R. Veeraiyan wrote continuously about Adi Dravidar education. A statement that was issued in his name:

அறிக்கை
நண்பர்கள்!
வீணாக காலங்கழிக்காதீர்கள். கோயம்புத்தூரில் நடைபெற்றுவரும் நக்ஷ்த்ரவாசக சாலை இரவு பள்ளிக்கூடத்தில் இரவு 7 மணியிலிருந்து 9 1/2 மணி வரைக்கும் இலவசமாக வாசித்து முன்னேறுங்கள்.
“முன் கசக்கும் பின் இனிக்கும்”

ஆர். வீரையன்
திருமால் வீதி                                   
கோயம்புத்தூர்

Statement
Friends!
Do not waste time. Go to the Nakshatravaasaga Road Night School that is being run in Coimbatore between 7 and 9.30 at night, read for free and progress.
‘What is bitter to start with, will be sweet later’
Thirumal Street                                    R. Veeraiyan
Coimbatore


என்று வெளியாகியிருந்தது. 1919ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் நந்தனார் பாடசாலையில் சுமார் 100 மாணவர்கள் படித்தார்கள் என்னும் குறிப்பையும் இதழ் தருகிறது.

is published thus. We learn from this magazine that the Chidambaram Nandanar School has about 100 students in the year 1919 itself.

பிராமணரல்லாதார் அரசியல் தலித் மக்களையும் உள்ளிழுத்துக்கொண்டு திராவிடர் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் இணைத்தபோதுதான் தனித்துவத்தின் அடையாளமாக ஆதிதிராவிடன் என்னும் சொல்லாடல் மேலுக்கு வந்தது. எனினும், இந்நடவடிக்கையில் முன்னின்ற எம்.சி. ராஜா நீதிக்கட்சியோடு இணைந்து பணியாற்றியதோடு தன் முயற்சியின் காரணமாக அச்சொல்லுக்கு அரசின் அங்கீகாரத்தையும் பெற்றார். ஆதிதிராவிடன் இதழுங்கூடப் பிராமணரல்லாத அரசியலையும் ராஜாங்கத்தின் கல்விப் பணிகளையும் ஆதரித்து எழுதிவந்தது. டாக்டர். டி.எம். நாயரின் மரணம் பற்றி விரிவான இரங்கல் அறிக்கையும் எழுதப்பட்டது.

It was when the non-Brahmin politics pulled in the Dalit people under the unified identity of Dravidan that the term Adi Dravidan came into use to identify difference. M.C. Raja, who worked with the Justice Party, through his labour, found government recognition for the term. The Adi Dravidan magazine, too, wrote in support of the non-Brahmin politics and Rajangam’s work in education. It published a long condolence message for the death of Dr. T.M. Nair.

ஆனால், 1921ஆம் ஆண்டு சென்னை பின்னி ஆலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டியெழுந்த கலவரத்தின் பின்னணியில் ஆதிதிராவிடன் இதழ் நீதிக் கட்சிக்கு எதிராக எழுதியது. இப்போராட்டத்தின் போது, எம்.சி. ராஜா தலித் மக்களை வேலைக்குத் திரும்பும்படி கோரியதால் அம்மக்களும் வேலைக்குத் திரும்பினர். அதனால் இம்மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. புளியந்தோப்பு கலவரம் என்று சொல்லப்பட்ட இக்கலவரத்தைத்தான் பறையர்களைச் சென்னையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டுமென எழுதப்பட்ட சர்.பி.டி. தியாகராயரின் அறிக்கையைத் திராவிடன் இதழ் வெளியிட்டது. நீதிக்கட்சியும் திராவிடன் இதழும் தலித்துகளுக்கு எதிராக நேரடியாகப் பேசின. இவ்விடத்தில் எம்.சி. ராஜா நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றார். இன்றைக்கும் சென்னை பின்னி மில் கலவரம், நீதிக்கட்சியின் தலித் எதிர்ப்பு ஆகிய அனைத்திற்கும் கிடைக்கும் தகுதி வாய்ந்த தலித் தரப்பு ஆதாரம் இவ்விதழ்தான்.

Yet in 1921, during the violence that followed the strike at the Binny Mill, the Adi Dravidan magazine wrote against the Justice Party. During this struggle, M.C. Raja requested the Dalit people to return to work and they did so. They were severely attacked in consequence. Houses were burnt. The Adi Dravidan magazine published a statement from Sir P.T. Thiagarayar saying that the Paraiyar should be removed from Chennai, during these riots that are termed the Pulianthope riots. The Justice Party and the Dravidan journal spoke openly against Dalits. At this point, M.C. Raja stood apart from the Justice Party. Till date, the only authoritative Dalit recording of the Chennai Binny Mill violence and the Justice Party’s opposition to Dalits is this journal alone.

நீதிக்கட்சியும் திராவிடன் போன்ற பத்திரிகையும் ஆதரவாயிருப்பார்கள் என்று நம்பிய ஆதிதிராவிடன் இதழ் சாதிஇந்துக்களும் கைவிட்டுவிட்டனர் என்று வருந்தி எழுதியது. திராவிடன் போன்ற இதழின் ஆதிதிராவிடர் விரோதப் போக்கைத் தொடர்ந்துதான் ‘ஆதிதிராவிடர்களுக்கு தினசரியோ வார இதழோ நடத்த வேண்டும் அல்லது ஆதிதிராவிடனையாவது வார இதழாக மாற்றிட’ வேண்டுகோள் விடுத்தது இவ்விதழ். அதோடு இலங்கையில் கூடியளவு நல்ல நிலைமையிலிருக்கும் இந்தியரும் ஆதிதிராவிடர்களும் இயன்ற அளவு தொகை அனுப்பும்படியும் உதவிசெய்பவர் பெயர் ஆதிதிராவிடனில் பிரசுரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோலச் செய்யவும்பட்டது.

The Adi Dravidan journal that had once believed that the Justice Party and the Dravidan journal would support them, expressed grief that the caste Hindus had abandoned them. It is an expression of the hostility towards the Adi Dravidan journal that the Dravidan journal asked that ‘the Adi Dravidar should have a daily or a weekly or the Adi Dravidan should be made a weekly’. Immediately, it was announced that the names of those who contribute for this – either well-to-do Indians in Sri Lanka or other Adi Dravidar – would be published in the pages of the Adi Dravidan magazine. This was done.

ஆதிதிராவிடர் நலனில் அர்ப்பணிப்புள்ள இந்த இதழை நீதிக்கட்சியை அம்பலப்படுத்தியது என்ற காரணத்தினாலேயே ‘கற்பனையான பத்திரிக்கை’ என்று சொல்லிவிடவும் இங்கு முயற்சிக்கப்பட்டது. எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து எழுதிய பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலில் “நீதிக்கட்சி பத்திரிக்கையான திராவிடன் இழிவுக் குறிப்போடு எழுதியதாகச் சிலர் கூறுவதும் அதன் பொருட்டுக் கற்பனையான சில பத்திரிகையொன்றை ஆதாரம் காட்டுவதும் அடிப்படையில்லாதவை”(பக். 381) என்று குறிப்பிடுவது ஆதிதிராவிடன் இதழைத்தான். அதேபோல 1940களில் ‘திராவிடஸ்தான் போல எங்களுக்கும் ஆதிதிராவிடஸ்தான் வேண்டும்’ என்று முனுசாமிப்பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, அதற்கு மறுப்பாக “திராவிடர், திராவிடம் என்பவை சரித்திரச் சான்றுகளைக் கொண்ட சொற்கள், ஆதிதிராவிடன் என்ற சொல்லுக்கு சரித்திர ஆதாரமில்லை” என்று விடுதலை தலையங்கம் சொன்னது. திராவிடம் என்னும் கருத்தாக்கத்தை உறுதிபடக் கட்டியெழுப்பிய கால்டுவெல்லின் விளக்கமே இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டவர்களே என்பதுதான்.

Since this magazine that had given itself to the service of the Adi Dravidar had ripped the mask off the Justice Party, there was an effort to brand this magazine as ‘imaginary’. S.V. Rajadurai and V. Geetha in their jointly-written Periyar: Suyamariyathai Samatharmam, refer to the Adi Dravidan magazine when they say ‘Some say baselessly that the journal of the Justice Party, the Dravidan, had used derogatory words and quote imaginary magazines as proof’. Similarly, in the 1940s, when Munusamipillai issued a statement that ‘We need Adi Dravidastan, just like Dravidastan’, the Viduthalai journal published an editorial that ‘Dravidar and Dravidian were words with historic proof, whereas Adi Dravidan did not have any historic standing’. It was to prove that the marginalised people of this country were its indigenous inhabitants that Caldwell built up the Dravidan ideology.

தலித்துகள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக இருக்கும்வரை அவர்களை ஆதரவாளர்களாகச் சொல்லுவதும் தனித்துவமாக எழுதவோ செயற்படவோ முனையும்போது, அவர்களின் இருப்பையே காலிசெய்யும் நிலைமைக்குத் துணிந்ததையுமே இப்போக்குகள் சுட்டுகின்றன.

As long as Dalits are supportive of their ideas, they were called supporters. The tendency to negate their very existence, when they sought to write or act separately, is visible here.

தொடக்ககால ஆதிதிராவிட முன்னோடிகள் பௌத்தம், வைணவம், சைவம் என்று வெவ்வேறு ஆன்மீக நோக்கங்களில் ஆர்வம் கொண்டிருந்தாலும் ஆதிதிராவிடர்களுக்கான நலன் எனும் பயணத்தில் ஒன்றுபட்டிருப்பதைக் காணமுடிகிறது. வித்வான் க்ஷி.கி. முனிசாமி பிள்ளை எழுதிய தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் புராணம் என்னும் நூல் வள்ளுவர் ஆதிதிராவிடரே என்பதை நிறுவவந்த நூலாகும் என்று ஆதிதிராவிடன் (1919 ஜூன் 15) கூறுகின்றது. 26.04.1920 சுதேசமித்திரனில் ஸ்ரீமான் கோ. குப்புசாமி என்பவர் வள்ளுவர் பஞ்சமரா? என்று சகஜானந்தரை நோக்கிக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பெருமாள் நாயனார் என்பவர் வள்ளுவர் பஞ்சமரே பறையரே என்று ஆதிதிராவிடனில்தான் (1920 ஜூன் 15) எழுதினார். வள்ளுவர் தொடர்பான இத்தகு விவாதம் இருபதாம் நூற்றாண்டில் பரவலாக நடந்ததாகவும் அதில் ஆதிதிராவிட அறிவாளிகள் பலரும் வள்ளுவர் பஞ்சமரே என்று நிறுவுவதில் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் தெரிகிறது. அயோத்திதாசப் பண்டிதரும் இத்தகு விளக்கத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

While the Adi Dravida leaders had various spiritual leanings including Buddhism, Vaishnavism and Shaivism in the early years, we can see that they were united in the journey towards the well-being of Adi Dravidar. Vidwan K.K. Munisami Pillai’s Theivappulamai Thiruvalluva Naayanaar Puranam tried to establish that Valluvar was an Adi Dravidar, according to the Adi Dravidan (1919 June 15) magazine. In Sudesamitran, issue dated 26.04.1920, Sriman K. Kuppusamy asks Sagajaanandar if Valluvar is a Panjamar. In reply to this, Perumal Nayanar writes in Adi Dravidan (1920 June 15) that Valluvar was indeed Panjamar and Paraiyar. Though this debate around Valluvar has been widespread through the 20th century, it is clear here that Dalit intellectuals were united in proving that Valluvar was truly a Panjamar. It is notable that Iyothee Thass was also involved in such explanations.

பயன்பட்ட ஆதாரங்கள்:
1. ராஜதுரை, எஸ்.வி., கீதா, வ. – பெரியார்: சுயமரியாதை – சமதர்மம். மே, 1999, விடியல் பதிப்பகம், கோவை.
2. ராஜதுரை, எஸ்.வி. – பெரியார் – ஆகஸ்ட் 15. பிப்ரவரி 1998, விடியல் பதிப்பகம், கோவை.

இதழ்கள்:
1. ஆதிதிராவிடன் (இரண்டு ஆண்டு இதழ் தொகுப்பு): மதுரை தலித் ஆதார மையம்.
2. தலித் – 2004 (ஜூலை-ஆகஸ்ட்) – ஆ.இரா. வேங்கடாசலபதியின் கட்டுரை.

References:
1. Rajadurai, S.V., Geetha, V. – Periyar: Suyamariyaathai – Samatharmam, May 1999, Vidiyal Pathippagam, Coimbatore
2. Rajadurai, S.V. – Periyar – August 15. February 1998, Vidiyal Pathippagam, Coimbatore
Journals
1. Adi Dravidan (Collected volume): Madurai Dalit Support Centre
2. Dalit – 2004 (July-August) – A. R. Venkatachalapathy’s essay


Adi Dravidan : The magazine that was made ‘imaginary’ (The truth and the falsification)
Stalin Rajangam
Read the first half of this essay in translation here

No comments:

Post a Comment